It is used for actions which will be continuing in future. (எதிர்காலத்தில் நடைபெறும் தொடர் செயல்)
(Though the traditional rule is to add "shall" with first person 'I' & 'We', in modern English "will" is accepted with all subjects including 'I' & 'We')
In case of first person "I,We", use "shall"
Future continuos tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்து கொண்டிருப்பேன், கொண்டிருப்போம், கொண்டிருப்பாய், கொண்டிருப்பீர்கள், கொண்டிருப்பான், கொண்டிருப்பாள், கொண்டிருக்கும், கொண்டிருப்பார்கள் என முடிவடையும்.
Tamil | English |
---|---|
நான் படித்துக்கொண்டிருப்பேன் | I shall be studying |
நாங்கள் படித்துக்கொண்டிருப்போம் | We shall be studying |
நீ படித்துக்கொண்டிருப்பாய் | You will be studying |
நீங்கள் படித்துக்கொண்டிருப்பீர்கள் | You will be studying |
அவன் படித்துக்கொண்டிருப்பான் | He will be studying |
அவள் படித்துக்கொண்டிருப்பாள் | She will be studying |
அது படித்துக்கொண்டிருக்கும் | It will be studying |
அவர்கள் படித்துக்கொண்டிருப்பார்கள் | They will be studying |